பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

பொருத்துக

        6 ஆம் வகுப்பு

  1. அணி   —  அழகுக்கான நகைகள்
  2. இன்சொலினிதே —  இனிய   சொற்களைப் பேசுதல்
  3. துன்புறூஉம்   —  துன்பம் தரும்
  4. துவ்வாமை     —   வறுமை
  5. யார் மாட்டும்   —   எல்லாரிடமும்
  6. இன்புறூஉம்   —   இன்பம் தரும்
  7. ஒருவற்கு         —   ஒருவனுக்கு
  8. அல்லவை    —   செய்யத்தகாதவை
  9. நாடி   —   விரும்பி
  10. நயன் ஈன்று   —    நல்ல பயன்களைத் தருதல்
  11. நன்றி   —    நன்றி
  12. பயக்கும்   —    கொடுக்கும்
  13. தலைப்பிரியாச் சொல் — நீங்காத சொற்கள்
  14. சிறுமை   —    துன்பம்
  15. மறுமை  — மறுபிரவி
  16. இம்மை  — இப்பிறவி
  17. ஈன்றல்   —  தருதல் , உண்டாக்குவது
  18. வன்சொல்  —  கடுஞ்சொல்
  19. எவன்கொலோ  —  ஏனோ
  20. கவர்தல்  —  நுகர்தல்
  21. அற்று  —  அதுபோன்றது
  22. இரட்சித்தல்  —  காப்பாற்றுதல்
  23. அல்லைத்தான்  —  அதுவும் அல்லாமல்
  24. ஆரைத் தான்  —  யாரைத்தான்
  25. பதுமத்தான்   —   தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்
  26. இணக்கவரும்படி  —  மனம் கனியும்படி
  27. குரைகடல்   —   ஒலிக்கும் கடல்
  28. பரங்குன்றுளான்  —  திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
  29. வானரங்கள்  —  குரங்குகள்
  30. மந்தி  —  பெண் குரங்கு
  31. வான்கவிகள்   —  தேவர்கள்
  32. கமனசித்தர்   —  வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்
  33. காயசித்தி   —  மனிதனின் இறப்பை தடுத்து காக்கும் மூலிகை
  34. பரிக்கால்   —  குதிரைக்கால்
  35. கூனல்   —  வளைந்த
  36. வேணி  —  சடை
  37. மின்னார்  —  பெண்கள்
  38. மருங்கு  —  இடை
  39. சூல் உளை  —  கருவைத் தாங்கும் துன்பம்
  40. கோட்டு மரம்  —  கிளைகளை உடைய மரம்
  41. பிற்றல் குடை   —  பிய்ந்த குடை
  42. ஆர்வலர்  —  அன்புடையவர்
  43. புன்கணீர்  —  துன்பத்தினால் பெருகும் கண்ணீர்
  44. பூசல் தரும்  —  வெளிப்பட்டு நிற்கும்
  45. என்பு   —   எலும்பு
  46. வழக்கு  —  வாழ்க்கை நெறி
  47. ஆருயிர்  —  அருமையான உயிர்
  48. ஈனும்  —  தரும்
  49. நண்பு  —  நட்பு
  50. மறம்  —  வீரம்
  51. என்பிலது  —  எலும்பு இல்லாதது
  52. அன்பிலது  —  அன்பில்லாத உயிர்கள்
  53. அன்பகத்தில்லா  —  அன்பு உள்ளத்தில் இல்லாத
  54. வற்றல் மரம்  —  வாடிய மரம்
  55. தளிர்த்தற்று  —  தளிர்த்தது போல
  56. புறத்துறுப்பு  —  உடல் உறுப்புகள்
  57. எவன் செய்யும்  —  என்ன பயன்
  58. அகத்துறுப்பு  —  மனத்தின் உறுப்பு, அன்பு
  59. நாய்க்கால்  —  நாயின்கால்
  60. ஈக்கால்  —  ஈயின்கால்
  61. நன்கணியர்  —  நெருங்கி இருப்பவர்
  62. என்னாம்  —  என்ன பயன்
  63. சேய்மை  —  தொலைவு
  64. செய்  —  வயல்
  65. அனையார்  —  போன்றோர்
  66. மடவார்  —  பெண்கள்
  67. தகைசால்  —  பண்பில் சிறந்த
  68. மனக்கினிய  —  மனதுக்கு இனிய
  69. காதல் புதல்வர்  —  அன்பு மக்கள்
  70. ஓதின்  —  எதுவென்று சொல்லும் போது
  71. புகழ்சால்  —  புகழைத் தரும்
  72. வானப்புனல்  —  மழைநீர்
  73. வையத்து அமுது  —  உலகின் அமுதம்
  74. வையம்  —  உலகம்
  75. பொடி  —  மகரந்தப் பொடி
  76. தழை  —  செடி
  77. தழையா வெப்பம்  —  பெருகும் வெப்பம், குறையாத வெப்பம்
  78. தழைக்கவும்  —  குறையவும்
  79. ஆற்றவும்  —  நிறைவாக
  80. தமவேயாம்  —  தம்முடைய
  81. ஆற்றுணா  —  வழி உணவு
  82. அவல்  —  பள்ளம்
  83. மிசை  —  மேடு
  84. ஆடவர்  —  ஆண்கள்
  85. நல்லை  —  நல்லதாக இருக்கிறாய்
  86. ஈரம்  —  அன்பு
  87. அளைஇ  —  கலந்து
  88. படிறு  —  வஞ்சம்
  89. செம்பொருள்  —  மெய்ப்பொருள்
  90. அகன்  —  அகம், உள்ளம்
  91. அமர்  —  விருப்பம்
  92. அமர்ந்து  —  விரும்பி
  93. முகன்  —  முகம்
  94. இன்சொல்  —  இனிய சொல்
  95. இன்சொலன்  —  இனிய சொற்களைப் பேசுபவன்
  96. அகத்தான் ஆம்  —  உள்ளம் கலந்து

டி.என்.பி.எஸ்.சி

Home

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன