பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 3

 பொருத்துக – 3

 

6 – ஆம் வகுப்பு – புதிய பாடப்புத்தகம்

 

  1. நெறி  —  வழி
  2. மல்லெடுத்த  —  வலிமைபெற்ற
  3. வற்றாமல்  —  குறையாமல்
  4. இழைத்து  —  பதித்து
  5. நன்றியறிதல்  —  பிறர் செய்த உதவியை மறவாமை
  6. பார்  —  உலகம்
  7. ஒப்புரவு  —  எல்லோரையும் சமமாகப் பார்த்தல்
  8. பண்  —  இசை
  9. நட்டல்  —  நட்புக் கொள்ளுதல்
  10. நந்தவனம்  —  பூஞ்சோலை
  11. மாடங்கள். —  மாளிகையின் அடுக்குகள்
  12. சித்தம்  —  உள்ளம்
  13. மாற்றார். —  மற்றவர்
  14. இயன்றவரை  —  முடிந்தவரை
  15. மேதைகள்  —  அறிஞர்கள்
  16. ஒருமித்து  —  ஒன்றுபட்டு
  17. மூத்தோர்  —  பெரியோர்
  18. ஓளடதம்  —  மருந்து
  19. தூற்றும் படி  —  இகழும்படி
  20. மாசற  —  குற்றமில்லாமல்
  21. தூற்றும்படி  —  இகழும்படி
  22. சீர்தூக்கின்  —  ஒப்பிட்டு ஆராய்தல்
  23. தேசம்  —  நாடு
  24. மேதினி  —  உலகம்
  25. காணி  —  நில அளவைக் குறிக்கின்ற சொல்
  26. ஊழி  —  நீண்டதொரு காலப்பகுதி
  27. அளி  —  கருணை
  28. உள்ளப்பூட்டு  —  உள்ளத்தின் அறியாமை
  29. நாமநீர்  —  அச்சம் தரும் கடல்
  30. திங்கள்  —  நிலவு
  31. மேரு  —  இமயமலை
  32. கொங்கு  —  மகரந்தம்
  33. பொற்கோட்டு  —  பொன்மயமான சிகரத்தில்
  34. அலர்  —  மலர்தல்
  35. திகிரி  —  ஆணைச்சக்கரம்
  36. ஆழிப் பெருக்கு  —  கடல் கோள்
  37. நிருமித்த  —  உருவாக்கிய
  38. அசதி  —  சோர்வு
  39. விளைவு  —  வளர்ச்சி
  40. சமூகம்  —  மக்கள் குழு
  41. எய்தும்  —  கிடைக்கும்
  42. பார்  —  உலகம்
  43. செம்மையருக்கு  —  சான்றோருக்கு
  44. பூதலம்  —  பூமி
  45. எல்லாரும்  —  எல்லா மக்களும்
  46. கும்பி  —  வயிறு
  47. ஏவல்  —  தொண்டு
  48. மாரி  —  மழை
  49. அல்லாமல்  —  அதைத்தவிர
  50. முற்றும்  —  முழுவதும்
  51. பராபரமே  —  மேலான பொருளே
  52. நீள்நிலம்  —  பரந்த உலகம்
  53. சுயம்  —  தனித்தன்மை
  54. ஆகாது  —  முடியாது
  55. உள்ளீடுகள்  —  உள்ளே இருப்பவை
  56. வீழும்  —  விழும்
  57. அஞ்சினர்  —  பயந்தனர்
  58. கருணை  —  இரக்கம்
  59. மறம்  —  வீரம்
  60. சமர்  —  போர்
  61. எக்களிப்பு  —  பெருமகிழ்ச்சி
  62. கூர்  —  மிகுதி
  63. பணி  —  தொண்டு
  64. தண்டருள்  —  குளிர்ந்த கருணை
  65. நல்கும்  —  தரும்
  66. கலம்  —  கப்பல்
  67. கழனி  —  வயல்
  68. ஆழி  —  கடல்
  69. தேசம்  —  நாடு
  70. மெய்  —  உண்மை
  71. அரிச்சுவடி  —  அகரவரிசை எழுத்துக்கள்
  72. மின்னல்வரி  —  மின்னல் கோடு
  73. கதிர்ச்சுடர்  —  கதிரவனின் ஒளி

 

7 – ஆம் வகுப்பு – புதிய பாடப்புத்தகம்

 

  1. பைங்கூழ் — பசுமையான பயிர்
  2. இரக்கம் — கருணை
  3. வன்சொல் — கடுஞ்சொல்
  4. பேதங்கள் — வேறுபாடுகள்
  5. சாந்தம் — அமைதி
  6. தத்துவம் — உண்மை
  7. தரணி — உலகம்
  8. மகத்துவம் — சிறப்பு
  9. ஈன — பெற
  10. இடர் ஆழி — துன்பம் விளைவிக்கும் கடல்
  11. களை — வேண்டாத செடி
  12. சொல் மாலை — பாமாலை
  13. நிலன் — நிலம்
  14. தகளி — அகல் விளக்கு
  15. வித்து — விதை
  16. ஞானம் — அறிவு
  17. நாரணன் — திருமால்
  18. கால் — வாய்க்கால், குதிரையின் கால்
  19. மறித்தல் — தடுத்தல்
  20. மாரி — மழை
  21. சுடர் ஆழியான் — ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
  22. வையம் — உலகம்
  23. வெய்ய — வெப்பக்கதிர் வீசும்
  24. வறந்திருந்த — வறண்டிருந்த
  25. சும்மாடு — பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
  26. கழலுதல் — உதிர்தல்
  27. மணி — முற்றிய நெல்
  28. மடை — வயலுக்கு நீர் வரும் வழி
  29. சாண் — நீட்டல் அளவைப்பெயர்
  30. சீலை — புடவை
  31. குழி — நில அளவைப்பெயர்
  32. புகவா — உணவாக
  33. மடமகள் — இளமகள்
  34. நல்கினாள் — கொடுத்தாள்
  35. முன்றில் — வீட்டின் முன் இடம்
  36. பரிதி — கதிரவன்
  37. வெற்பு — மலை
  38. அன்னதோர் — அப்படி ஒரு
  39. கார்முகில் — மழைமேகம்
  40. நிகர் — சமம்
  41. முட்டப்போய் — முழுதாகச் சென்று
  42. பரி — குதிரை
  43. வண்கீரை — வளமான கீரை
  44. மேனி — உடல்
  45. மழலை — குழந்தை
  46. துயின்றிருந்தார் — உறங்கியிருந்தார்
  47. வைப்புழி — பொருள் சேமித்து வைக்கும் இடம்
  48. கோட்படா — ஒருவரால் கொள்ளப்படாது
  49. பூரிப்பு — மகிழ்ச்சி
  50. நெடி — நாற்றம்
  51. வனப்பு — அழகு
  52. வாய்த்து ஈயில் — வாய்க்கும் படி கொடுத்தலும்
  53. விச்சை — கல்வி
  54. பிரும்மாக்கள் — படைப்பாளர்கள்
  55. சாஸ்தி — மிகுதி
  56. சிங்காரம் — அழகு
  57. விஸ்தாரம் — பெரும்பரப்பு
  58. கமுகு — பாக்கு
  59. மதலை — தூண்
  60. சென்னி — உச்சி
  61. ஞெகிழி — தீச்சுடர்
  62. உரவுநீர் — பெருநீர்ப்பரப்பு
  63. எத்தனிக்கும் — முயலும்
  64. நீகான் — நாவாய் ஓட்டுபவன்
  65. மாட ஒள்ளெரி — கலங்கரை விளக்கம்
  66. கோடு உயர் — கரை உயரந்த
  67. வங்கூழ் — காற்று
  68. எல் — பகல்
  69. போழ — பிளக்க
  70. வங்கம் — கப்பல்
  71. உரு — அழகு
  72. அழுவம் — கடல்
  73. கரையும் — அழைக்கும்
  74. வேயா மாடம் — வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது , திண்மையாகச் சாந்தால் பூசப்பட்ட மாடம்
  75. முகில் — மேகம்
  76. அற்புதம் — விந்தை
  77. உபகாரி — வள்ளல்
  78. ஈன்று — பெற்று
  79. களித்திட — மகிழ்ந்திட
  80. கொம்பு — கிளை
  81. நச்சரவம் — விடமுள்ள பாம்பு
  82. அதிமதுரம் — மிகுந்த சுவை
  83. பொக்கிஷம் — செல்வம்
  84. வாரணம் — யானை
  85. சூரன் — வீரன்
  86. ஈன்ற — பெற்றெடுத்த
  87. கல் அளை — கற்குகை
  88. விடுதி — தங்கும் இடம்
  89. பரவசம் — மகிழ்ச்சி பெருக்கு
  90. துஷ்டி கேட்டல் — துக்கம் விசாரித்தல்
  91. யாண்டு — எங்கே
  92. சிற்றில் — சிறு வீடு
  93. ஒப்புமை — இணை
  94. பொழிகிற — தருகின்ற
  95. விரதம் — நோன்பு
  96. குறி — குறிக்கோள்
  97. ஊக்கிவிடும் — ஊக்கப்படுத்தும்

 

8 – ஆம் வகுப்பு புதியப்புத்தகம்

 

  1. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
  2. நிறை – மேன்மை
  3. அழுக்காறு – பொறாமை
  4. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்
  5. மன்னும் – நிலைபெற்ற
  6. மையல் – விருப்பம்
  7. இகல் – பகை
  8. பொச்சாப்பு – சோர்வு
  9. மதம் – கொள்கை
  10. பொறை – பொறுமை
  11. பகராய் – தருவாய்
  12. வழிவர் – நழுவி ஓடுவர்
  13. கரி – யானை
  14. பிலம் – மலைக்குகை
  15. தூறு – புதர்
  16. மண்டுதல் – நெருங்குதல்
  17. அருவர் – தமிழர்
  18. இறைஞ்சினர் – வணங்கினர்
  19. உடன்றன – சினந்து எழுந்தன
  20. ஈயில் – வழங்கினால்
  21. நம்பர் – அடியார்
  22. உய்ம்மின் – ஈடேறுங்கள்
  23. சித்தம் – உள்ளம்
  24. நாணாமே – கூசாமல்
  25.   நமன் – எமன்
  26.   மோகித்து – விரும்பி
  27.   ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
  28.   சபதம் – சூளுரை
  29.   சத்தியம் – உண்மை
  30.   சீவன் – உயிர்
  31.   முழை – மலைக்குகை
  32.   மறலி – காலன்
  33.   யாணர் – புது வருவாய்
  34.   வெரீஇ – அஞ்சி
  35.   ஓதை – ஓசை
  36.   வைகுக – தங்குக
  37.   ஒட்டாது – வாட்டம் இன்றி
  38.   முட்டாது – தட்டுப்பாடின்றி
  39.   எஞ்சாமை – குறைவின்றி
  40.   முரலும் – முழங்கும்
  41.   பழவெய் – முதிர்ந்த மூங்கில்
  42.   அலந்தவர் – வறியவர்
  43.   கிளை – உறவினர்
  44.   செறா அமை – வெறுக்காமை
  45.   வாரி – வருவாய்
  46.   பொறை – பொறுமை
  47.   போற்றார் – பகைவர்
  48.   மறா அமை – மறவாமை
  49.   நோன்றல் – பொறுத்தல்
  50.   பேதையார் – அறிவற்றவர்
  51.   பேர்தற்கு – அகற்றுவதற்கு
  52.   பிணி – துன்பம்
  53.   திரியோக மருந்து – மூன்றுயோக மருந்து
  54.   ஓர்தல் – நல்லறிவு
  55.   தெளிவு – நற்காட்சி
  56.   பிறவார் – பிறக்கமாட்டார்
  57.   நித்தம் நித்தம் – நாள்தோறும்
  58.   வையம் – உலகம்
  59.   மத வேழங்கள் – மத யானைகள்
  60.   கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
  61.   பண் – இசை
  62.   அகம்பாவம் – செருக்கு
  63.   மட்டு – அளவு
  64.   தடம் – அடையாளம்
  65.   பேணுவையேல் – பாதுகாத்தல்
  66.   முற்றை – ஒளிர
  67.   திட்டுமுட்டு – தடுமாற்றம்
  68.   கலன் – அணிகலன்
  69.   கெடிகலங்கி – மிக வருந்தி
  70.   வாகு – சரியாக
  71.   சம்பிரமுடன் – முறையாக
  72.   காலன் – எமன்
  73.   சேகரம் – கூட்டம்
  74.   மெத்த – மிகவும்
  75.   பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
  76.   நிழல் இகழும் – ஒளி பொருந்திய
  77.   கூற்றவா – பிரிவுகளாக
  78.   உவசமம் – அடங்கி இருத்தல்
  79.   திறந்தன – தன்மையுடையன
  80.   தீர்வன – நீங்குபவை
  81.   காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
  82.   வின்னம் – சேதம்
  83.   முகில் – மேகம்
  84.   வள்ளைப்பாட்டு – நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
  85.   புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
  86.   நன்செய் – அதிக நீர் வளம் கொண்ட பயிர்கள் செழித்து வளரும் நிலம்
  87.   விசும்பு – வானம்
  88.   மரபு – வழக்கம்
  89.   மயக்கம் – கலவை
  90.   திரிதல் – மாறுபடுதல்
  91.   இருதிணை – உயர்திணை, அஃறிணை
  92.   செய்யுள் – பாட்டு
  93.   வழாஅமை – தவறாமை
  94.   தழாஅல் – தழுவுதல்
  95.   செஞ்சோல் – திருந்திய சொல்
  96.   முழவு – இசைக்கருவி
  97.   நாணம் – வெட்கம்
  98.   ஈரம் – இரக்கம்
  99.   பயிலுதல் – படித்தல்
  100.   தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
  101.   ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
  102.   தொல்லை – பழமை, துன்பம்
  103.   சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  104.   இசை – புகழ்
  105.   நிரந்தரம் – காலம் முழுமையும்
  106.   வண்மொழி – வளமிக்க மொழி
  107.   வைப்பு – நிலப்பகுதி                                                                                                                                                        1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

           2. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 2

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன