தேர்வுப் பாடத்திட்டங்கள்
எந்த ஒரு போட்டித்தேர்விற்கு தயாராக நீங்கள் விரும்பினாலும் முதலில் அந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வமான பாடத்திட்டங்களை நன்கு படித்து தெளிவு பெறுதல் வேண்டும்.
அதன் பின்னர் அந்த பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாடத்தலைப்புகள் வாரியாக நீங்கள் தேர்வுக்கு படிக்கத்துவங்க வேண்டும். முதலில் பாடத்திட்டத்தின் வாரியாக படித்துவிட்டு பின் நேரமிருந்தால் நீங்கள் பாடத்திட்டத்திற்கு வெளியில் உள்ள பாடங்களைப் படிக்கலாம்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்காக தயாராகும் நீங்கள் , அந்தப் பாடத்திட்டங்களை இந்த இணைப்பு வழியாக TNPSC New Syllabus Download நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த நேரடியான இணைப்பு வழியாக நீங்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 & 2A, குரூப் 4, என அனைத்து தேர்வுக்கான பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்யதுகொள்ளலாம்.
தேர்விற்க்கான பாடத்திட்டத்தின்படி உள்ள பாடத்தலைப்புகளை நீங்கள் முழுமையாக நூறு சதவீதம் படித்து தயார்படுத்திவிட்டு, மாதிரித் தேர்வுகளை அதிகமாக எழுதி பயிற்சி எடுத்துவிட்டீற்களேயானால், உங்களால் தேர்வில் 150 கேள்விகளுக்கு சரியான விடையை அழிக்கமுடியும். மீதமுள்ள 50 வினாக்களில் கெஸ்ஸிங் மூலமாக 25 வினாக்கள் வரை சரியாக விடையளிக்க முடியும்.
மொத்தமாக பார்க்க வேண்டுமானால் தேர்வில் உங்களால் 170 முதல் 180 மதிப்பெண் வரை எடுக்க முடியும், நீங்கள் சரியான பாதையில் தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டால்.
சரியான திட்டமிடலும், சரியான உழைப்பும், சரியான பயிற்ச்சியும் இருந்தால் எந்தத் தேர்விலும் வெற்றியடையலாம்.