ப 7 – ஆம் வகுப்பு
- உவப்ப — மகிழ
- கசடு — குற்றம்
- உடையார் — செல்வர்
- கடையார் — தாழ்ந்தவர்
- ஏக்கற்று — கவலைப்பட்டு
- தொட்டணைத்து — தோண்டும் அளவு
- சாந்துணையும் — சாகும் வரையிலும்
- ஏமாப்பு — பாதுகாப்பு
- மதுகரம் — தேன் உண்ணும் வண்டு
- முழவு — மத்தளம்
- வரை — மலை
- நனி — மிகுதி
- பேறு — செல்வம்
- கதி — துணை
- மதோன்மத்தர் — சிவன்
- மாடு — செல்வம்
- காமுறுவர் — விரும்புவர்
- தென் கமலை — தெற்கில் உள்ள திருவாரூர்
- பூங்கோயில் — திருவாரூர் கோயிலின் பெயர்
- உருகுவார் — வருந்துவார்
- பதுமை — உருவம்
- கணக்காயர் — ஆசிரியர்
- சேமம் — நலம்
- முட்டு — குவியல்
- நிவேதனம் — படையலமுது
- கனகம் — பொன்
- புரவி — குதிரை
- கோ — அரசன்
- கடுகி — விரைந்து
- மெழி — கலப்பை
- ஆழி — மோதிரம்
- காராளர் — மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
- தூறு — புதர்
- வனப்பு — அழகு
- நெறி — வழி
- தூஉயம் — தூய்மை உடையோர்
- பால் பற்றி — ஒருபக்கச் சார்பு
- சாடும் — தாக்கும்
- பரிவாய் — அன்பாய்
- துன்னலர் — பகைவர் , அழகிய மலர்
- மெய் — உடம்பு
- தானை — படை
- பண் — இசை
- வண்மை — கொடை
- புரை — குற்றம்
- எய்யாமை — வருந்தாமை
8 – ஆம் வகுப்பு
- தவம் — பெரும்பேறு
- திடம் — உறுதி
- உபாயம் — வழிவகை
- முகை — மொட்டு
- மேனி — உடல்
- தாது — மகரந்தம்
- போது — மலர்
- பொய்கை — குளம்
- பூகம் — கமுகம் ( பாக்கு மரம் )
- திறல் — வலிமை
- வழக்கு — நன்னெறி
- ஆன்ற — உயர்ந்த
- நயன் — நேர்மை
- பாடறிவார் — நெறியுடையார்
- மாய்வது — அழிவது
- அரம் — வாளைக் கூர்மையாக்கும் கருவி
- நயம் இல — தீங்கு, நன்மையில்லா
- கடை — இழிவு
- நகல்வல்லர் — சிரித்து மகிழ்பவர்
- மாயிரு — பெரிய
- நீடிய — தீராத
- வான்பெற்ற நதி — கங்கையாறு
- துழாய் அலங்கல் — துளசி மாலை
- களபம் — சந்தனம்
- புயம் — தோள்
- தைவந்து — தொட்டுத் தடவி
- ஊன் — தசை
- பகழி — அம்பு
- தேட்டை — செல்வம்
- மீட்சி — மேன்மை
- மாள — நீங்க
- அமுதகிரணம் — குளிர்சியான ஒளி
- உதயம் — கதிரவன்
- மதுரம் — இனிமை
- நறவம் — தேன்
- கழுவு துகளர் — குற்றமற்றவர்
- சலதி — கடல்
- அலகு இல — அளவில்லாத
- பருதிபுரி — வைத்தீசவரன் கோயில்
- கிழமை — உரிமை
- ஆறு — வழி
- அல்லல் — துன்பம்
- உடுக்கை — ஆடை
- இடுக்கண் — துன்பம்
- ஊன்றும் — தாங்கும்
- புனைதல் — புகழ்தல்
- புல் — கீழான
- குவை — குவியல்
- குழவி — குழந்தை
- மன்னுயிர் — நிலைபெற்ற உயிர்
- பிணி — நோய்
- சலவர் — வஞ்சகர்
- களறும் — பேசும்
- மயரி — மயக்கம்
- இடித்தல் — கடிந்துரைத்தல்
- பராபரம் — மேலான இறைவன்
- நட்டல் — நட்புகொள்ளுதல்
- காப்பு — காவல்
- நகுதல் — சிரித்தல்
- நீரவர் — அறிவுடையார்
- நயம் — இன்பம்
- கேண்மை — நட்பு
- பேதையார் — அறிவிலார்
- சேய்மை — தொலைவு
- துலங்குதல் — விளங்குதல்
- காசினி — நிலம்
- களையும் — நீக்கும்
- நன்னுதல் — அழகிய நெற்றி
- வெள்கி — நாணி
- மதியம் — நிலவு
- களி — மகிழ்ச்சி
- சம்பு — நாவல்
- வயவேந்து — வெற்றி வேந்தன்
- தியங்கி — மயங்கி
- ஒண்தாரை — ஒளிமிக்க மலர்மாலை
- மது — தேன்
- மல்லல் — வளம்
- மறுகு — அரச வீதி
- செம்மாந்து — பெருமிதத்துடன்
- மடநாகு — இளைய பசு
- மழவிடை — இளங்காளை
- சூழ்விதி — நல்வினை
- மாரன் — மன்மதன்
- கடிமாலை — மணமாலை
- வள்ளை — உலக்கைப் பாட்டு
- செம்மைசேர் — புகழ்மிகு
- அளகு — கோழி
- தார் — மாலை
- சேடி — தோழி
- ஆழி — கடல்
- புள் — அன்னம்
- விசும்பு — வானம்
- செற்றான் — வென்றான்
- கள் — தேன்
- அரவு — பாம்பு
- மேதி — எருமை
- பிள்ளைக்குருகு — நாரைக்குஞ்சு
- திரை — அலை
- வள்ளை — ஒரு வகை நீர்க்கொடி
- கழி — உப்பங்கழி
- கடா — எருமை
- கோடு — கொம்பு
- வெளவி –கவ்வி
9 – ஆம் வகுப்பு
- நோன்மை — தவம்
- ஆகடியம் — ஏளனம்
- இருநிலம் — பெரிய நிலம்
- வதைப்புண்டு — துன்பமடைந்து
- ஈண்டு — இவ்விடம்
- கீண்டு — பிளந்து
- புகல்வது — சொல்வது
- துஞ்சினவர் — உறங்கியவர்
- காண்டகு — காணத்தக்க
- இசைபெறுதல் — புகழ்பெறுதல்
- கடாவினார் — அடித்தார்
- தொழும்பர் — அடியார்
- கீண்டு — தோண்டி
- பலபாடு — பலதுன்பம்
- செற்றம் — சினம்
- பன்னரிய — சொல்லுதற்கரிய
- குருசு — சிலுவை
- துளக்கம் — விளக்கம்
- சொற்ற — சொன்ன
- செய்கை — இருவினை
- அரு — உருவமற்றது
- உரு — வடிவம்
- வேட்கை — விருப்பம்
- பெரும் பேறு — வீடுபேறு
- கோடு — கொம்பு
- ஊழி — உலகம்
- திண்மை — வலிமை
- துலையல்லார் — ஆற்றலில் குறைந்தவர்
- மாற்றார் — பகைவர்
- சால்பு — சான்றாண்மை
- ஒப்புரவு — உதவுதல்
- சீலம் — ஒழுக்கம்
- வெகுளல் — கடுஞ்சினம் கொள்ளுதல்
- அலகில — அளவற்ற
- குறளை — புறம்பேசுதல்
- புரைதீர் — குற்றம் நீங்கிய
- கேண்மின் — கேளுங்கள்
- கூற்றுவன் — எமன்
- மாசில் — குற்றமற்ற
- வெஃகல் — பெரு விருப்பம்
- யாக்கை — உடம்பு
- வள் — நெருக்கம்
- ஆயம் — தோழியர் கூட்டம்
- புறவு — புறா
- துவ்வா — நுகராத
- ஈர்த்து — அறுத்து
- பகர்வது — சொல்வது
- துலை — தராசு
- உகு — பொழிந்த
- நிறை — ஒழுக்கம்
- முகில் — மேகம்
- வன்கண் — வீரத்தன்மை
- நவ்வி — மான்
- கூர — மிக
- மேனி — உடல்
- களிறு — ஆண் யானை
- மருப்பு — தந்தம்
- மாறன் — பாண்டிய மன்னன்
- திருத்தக்க — செல்வம் நிலைத்த
- மீனவன் — மீன் கொடியை உடைய பாண்டியன்
- விசும்பு — வானம்
- இசைபட — புகழ்பட
- விபுதர் — புலவர்
- அவியினும் — இறந்தாலும்
- தூங்கிய — தொங்கிய
- வணங்கிய — பணிவான
- பொற்கிழி — பொன் முடிப்பு
- நுணங்கிய — நுட்பமாகிய
- நம்பி — தருமி
- தோட்கப்படாத — துளைக்கப்படாத
- புறம்பு — வெளியில்
- ஈண்டில் — ஆய்ந்தறிந்த
- பையுள் — வருத்தம்
- பனவன் — அந்தணன்
- கண்டம் — கழுத்து
- வழுவுப் பாடல் — குற்றமுள்ள பாடல்
- இழைத்துணர்ந்து — நுட்பமாக ஆராய்ந்து
- ஆன்ற — நிறைந்த
- எனைத்தானும் — எவ்வளவு சிறியதாயினும்
- ஒற்கம் — தளர்ச்சி
- ஆர் அவை — புலவர்கள் நிறைந்த அவை
- கிளத்தினேன் — சொன்னேன்
- சீரணி — புகழ் வாய்ந்த
- வேணி — செஞ்சடை
- ஓரான் — உணரான்
- அவி உணவு — தேவர்களுக்கு வழங்கப்படும் உணவு
- போழ்து — பொழுது
- கரந்தான் — மறைந்தான்
- நாவலன் — புலவன்
- அற்குற்ற – இருளையொத்த
- குழல் — கூந்தல்
- அல்கு — இரவு
- ஏத்தும் — வணங்கும்
- பொற்பங்கயத்தடம் — பொற்றாமரைக் குளம்
- ஞானப்பூங்கோதை — உமையம்மை
- வெருவிலான் — அச்சமற்ற நக்கீரன்
- நுதல் விழி — நெற்றிக்கண்
- சலம் — மன உறுதி
- உம்பரார் பதி — தேவர்களின் தலைவன் / இந்திரன்
- அன்னவர் — இறைவன்
- இறைஞ்சி — பணிந்து
- நல்கினார் — அளித்தார்
- இன்னல் — துன்பம்
- இரந்து — பணந்து
- உய்ய — பிழைக்க
- வையை நாடவன் — பாண்டியன்
- அலகிலா — அளவற்ற
- உளவாக்கல் — உண்டாக்குதல்
- அகழ்வாரை — தோண்டுபவரை
- இறப்பினை — பிறர் செய்த துன்பத்தை
- இன்மை — வறுமை
- சதுரங்கச் சேனை — நால்வகைப் படை
- வீறு — வலிமை
- புன்மை — நெறி பிறழ்ந்த செயல்கள்
- அரம்பையர் — தேவ மகளிர்
- பண்ணவர் — தேவர்
- குலவு — விளங்கும்
- கா — காடு
- ஒரால் — தவிர்த்தல் , நீக்குதல்
- மடவார் — அறிவற்றார்
- நிறை — சால்பு
- ஒறுத்தாரை — தண்டித்தவரை
- திறனல்ல — செய்யத்தகாத
- நோநொந்து — துன்பத்துக்கு வருந்தி
- மிகுதியான் — மனச்செருக்கால்
- மிக்கவை — தீமை
- செறிந்து — அடர்ந்து
- கோலமுறு — அழகுமிக்க
- மருங்கு — பக்கம்
- மணிநகர் — அழகிய நகரம்
- தடந்தோள் — வலிய தோள்
- இன்னா — தீய
- கண்ணோட்டம் — இரக்கம் கொள்ளுதல்
- கிளர்வேந்தன் — புகழுக்குரிய அரசன்
- அடவி — காடு
- களிக்க — மகிழ
- வாட்டான் — வருத்த மாட்டான்
- மடப்பிடி — பாஞ்சாலி
10 – ஆம் வகுப்பு
- விழுப்பம் — சிறப்பு
- தடக்கை — நீண்ட கைகள்
- அணங்கு — காளி
- வித்து — விதை
- ததும்பி — பெருகி
- சயசய — வெல்க வெல்க
- விரை — மணம்
- மெய் — உடல்
- ஓல்லாவே — இயலாவே
- இடும்பை — துன்பம்
- எய்துவர் — அடைவர்
- ஏதம் — குற்றம்
- பரிந்து — விரும்பி
- தேரினும் — ஆராய்ந்து பார்த்தாலும்
- இழுக்கம் — ஒழுக்கம் இல்லாதவர்
- உரவோர் — மனவலிமையுடையோர்
- ஓல்கார் — விலகமாட்டார்
- அழுக்காறு — பொறாமை
- ஆக்கம் — செல்வம்
- முறுவல் — புன்சிரிப்பு
- விளம்பினான் — சொன்னான்
- மாதிரம் — மலை
- கேசரி — சிங்கம்
- செத்தை — குப்பைக்கூளம்
- தார் — மாலை
- புளகிதம் — மகிழ்ச்சி
- காது — கொல்லுதல்
- பூதரம் — மலை
- தெண்டனிட்டது — வணங்கியது
- பனை — மூங்கில்
- வானகம் — தேவருலகம்
- கவிகை — குடை
- பொருது — மோதி
- சலாம் — வணக்கம்
- மந்தராசலம் – மந்தரமலை
- சந்தம் — அழகிய
- அறைந்த — சொன்ன
- பகரா — கொடுத்து
- நோன்றல் — பொறுத்தல்
- கிளை — சுற்றம்
- உன்னி — நினைத்து
- செகுத்திடுவது — உயிர்வதை செய்வது
- புயம் — தோள்
- மரை — மான்
- எண்கு — கரடி
- கேழல் — பன்றி
- கவை — பிளந்த
- தொனி — ஓசை
- அலறும் — முழங்கும்
- உரும் — இடி
- இரும்பனை — பெரிய பனை
- கிரி — மலை
- புலால் — இறைச்சி
- மடங்கல் — சிங்கம்
- வள்ளுகிர் – கூர்மையான நகம்
- நிணம் — கொழுப்பு
- மதகரி — மதம் பொருந்திய யானை
- கோடு — தந்தம்
- பத்தடுத்த — பத்து மடங்கு
- எள்ளுவர் — இகழ்வர்
- வெள்ளெயிறு –வெண்ணிறப் பற்கள்
- கூண்ட — சேரந்த
- உழுவை — புலி
- அடவி — காடு
- அணித்தாய் — அண்மையில்
- தாரை — வழி
- அறைகுவன் — சொல்லுவான்
- திரள் — கூட்டம்
- ஈனும் — தரும்
- புல்லார் — பற்றார்
- செறு — பகை
- குழவி — குழந்தை
- செருக்கு — இறுமாப்பு
- ஏமாப்பு — பாதுகாப்பு
- நடலை — துன்பம்
- தடக்கரி — பெரிய யானை
- கான் — காடு
- நமன் — எமன்
- தெண்டிரை — தெளிந்த அலைகள்
- மதலை — துணை
- ஏமரா — பாதுகாவல் இல்லாத
- இடிக்கும் — கடிந்துரைக்கும்
- உதிரம் — குருதி
- பூதி — திருநீறு
- அங்கணர் — சிவன்
- பணிவிடம் — பாம்பின் நஞ்சு
- சவம் — பிணம்
- கோதில் — குற்றமில்லாத
- செற்றார் — பகைவர்
- தக்கார் — பெரியோர்
- சூழ்வார் — அறிவுடையார்
- வன்மை — வலிமை
- தமர் — உறவினர்
- உறாஅமை — துன்பம் வராமல்
- தேர்ந்து — ஆராய்ந்து
- கேண்மை — நட்பு
- நாளிகேரம் — தென்னை
- ஏர் — அழகு
- தொடை — மாலை
- கலம் — அணி
- காய்ந்தார் — நீக்கினார்
- மேதி — எருமை
- நிறைகோல் — துலாக்கோல்
- தண்ணளித்தாய் — குளிர்ச்சி நிறைந்த
- மிசை — மேல்
- ஒல்லை — விரைவு
- அம் — அழகிய
- அங்கை — உள்ளங்கை
- அழங்கி — மிக வருந்தி
- அல்லல் — துன்பம்
- அரா — பாம்பு
- தடம் — தடாகம்
- சந்தம் — அழகு
- ஈறு — எல்லை
- கல்மிதப்பு — கல்லாகிய தெப்பம்
- புவனம் — உலகம்
- கமலம் — தாமரை
- தெருளும் — தெளிவில்லாத
- சூலை — கொடிய வயிற்றுநோய்
- அமலன் — குற்றமற்றவன்
- இளவல் — தம்பி
- உன்னேல் — நினைக்காதே
- சேய — தொலைவு
- மின்னிய — நிலைபெற்ற
- துகிர் — பவளம்
- வட்டி — பனையோலைப் பெட்டி
- அரி — நெற்கதிர்
- செறு — வயல்
- யாணர் — புதுவருவாய்
- ஈர்கிலா — எடுக்க இயலாத
- தீர்கிலேன் — நீங்க மாட்டேன்
- குரிசில் — தலைவன்
- முரிதிரை — மடங்கிவிழும் அலை
- முடுகினன் — செலுத்தினன்
- கடிது — விரைவாக
- நுதல் — நெற்றி
- நயனம் — கண்கள்
- இந்து — நிலவு
- நாமம் — பெயர்
- கல் — மலை
- திரள் — திரட்சி
- துடி — பறை
- அல் — இருள்
- திரை — அலை
- மருங்கு — பக்கம்
- குறுகி — நெருங்கி
- பவித்திரம் — தூய்மையானது
- உண்டனெம் — உண்டோம்
- தழீஇய — கலந்த
- கார்குலாம் — மேகக்கூட்டம்
- பார்குலாம் — உலகம் முழுவதும்
- சேவிக்க — வணங்க
- குறுகினன் — வந்துள்ளான்
- குஞ்சி — தலைமுடி
- அருந்தியன் — அன்பு உடையவன்
- விளம்பல் — கூறுதல்
- முறுவல் — புன்னகை
- மாதவர் — முனிவர்
- அம்பி — படகு
- தாபிப்போம் — நிலை நிறுத்துவோம்
- சாய்க்காமை — அழிக்காமை
- தகத்தகாய — ஒளிமிகுந்த
- மடக்கொடி — கண்ணகி
- வாய்முதல் — உதடு
- படரா — செல்லாத
- நற்றிறம் — அறநெறி
- கொற்றம் — அரச நீதி
- கோறல் — கொல்லுதல்
- தாருகன் — அரக்கன்
- செற்றம் — கறுவு
- ஏசா — பழியில்லா
- ஆழி — தேர்ச்சக்கரம்
- புன்கண் — துன்பம்
- செயிர்த்தனள் — சினமுற்றவள்
- தேரா — ஆராயாத
- எள்ளறு — இகழ்ச்சி இல்லாத
- இமையவர் — தேவர்
- புள் — பறவை / புறா
பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 1 :
https://tnpscstudymaterialsource.com